உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், ‘இருவர்’ படம் மூலம் அறிமுகமாகி பின்னர் ‘ஜீன்ஸ்’, ‘கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’, ‘எந்திரன்’ உட்பட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் ‘ராவணன்’. இந்தப் படம் 2010-ஆம் ஆண்டு வெளியானது.

படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ராய் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்க போகிறாராம்.

‘குரு’, ‘இருவர்’, ‘ராவணன்’ படங்களைத் தொடர்ந்து, மறுபடியும் மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது உறுதியாகிவிட்டது.

தமிழ் மற்றும் இந்தியில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.

ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடி யார் என்பது பற்றி விரைவில் தெரியவரும்.