வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் குறையல, என்று படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய பஞ்ச் யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ... நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நன்றாகவே பொருந்தும். காரணம் இவர் வயது அதிகரிக்க அதிகரிக்க தான் அழாகாகிக்கொண்டே போகிறார் என கூறி வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.        

திருமணத்திற்கு பின் சிறந்த கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஐழ்வார்யா ராய்யுக்கு இன்று 45 வது பிறந்தநாள். எனினும் இவரை ஹீரோயினாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஐஸ்வர்யா ராய், இன்று தன்னுடைய 45 ஆவது பிறந்தநாளை இன்று குடும்பத்துடன் கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும் ஐஸ்வர்யா ராய்யுக்கு தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளத்தின் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.