பச்சன் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒருவர். சமீபத்தில் அவர்கள் தங்கள் 15வது திருமண நாளை கொண்டாடினர். 

உலக அழகியாக ஜொலித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார்அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை கடந்த 2007 இல் மணந்தார். நட்சத்திர தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். ராய் ஐஸ்வர்யா பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிராண்ட் தூதராக பணியாற்றி வருகிறார். அதோடு எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்டத்திற்கான ( UNAIDS) நல்லெண்ணத் தூதராகவும் ஐஸ்வர்யா உள்ளார்.

பச்சன் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒருவர். சமீபத்தில் அவர்கள் தங்கள் 15வது திருமண நாளை கொண்டாடினர். இந்த சிறப்பு தினத்தையொட்டி, ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் இப்போது சமூக ஊடகங்களில் ஒரு சிறப்பு த்ரோபேக் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட இருவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் எப்போதும் ஒருவரையொருவர் ஆதரித்து வருகின்றனர். இந்த 15 வருடங்களில் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்திருக்கிறார்கள். இன்றும், இந்த ஜோடி பொழுதுபோக்கு உலகில் சிறந்த ஜோடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

View post on Instagram