இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'செக்கச்சிவந்த வானம்' திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலிலும் கெத்து காட்டியது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அடுத்த  படத்தை இயக்க தயாராகிவிட்டார் மணிரத்னம்.  இந்த படமும் முன்பு எடுத்த படத்தைப்போலவே மல்டி ஸ்டார் படமாக எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இது பொன்னியின் செல்வன் கதையாக கூட இருக்கலாம் என பல செய்திகள் வெளிவருகின்றன, ஆனால் இதுகுறித்து தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மணிரத்னம் இயக்கயுள்ள அடுத்த படத்தில்,  நடிகர் விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோர் நடிக்க உள்ளதாகவும்,  இதில் கதாநாயகிகளாக நடிக்க நடிகை ஐஸ்வர்யாராயிடம் பேசி அவரை ஒப்புக்கொள்ள வைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.  மேலும் மற்றொரு நடிகையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் சிலர் கிசுகிசுத்து வருகிறார்கள்.

இயக்குனர் மனிதத்தை பொறுத்தவரை பல நடிகர்களை வைத்து படம் இயக்குவது அவருக்கு புதிதல்ல. அதே போல் பல மொழிகளில் வெளியிடுவது என்கிற வியாபார உத்தி மிகவும் பாதுகாப்பாக இருப்பதால் மணிரத்னம் இதைக் கடைபிடிக்கிறார் என்று சொல்கிறார்கள். இப்படத்தில் ஐஸ்வர்யாராய் இருப்பதால் படத்தை இந்தியிலும் வெளியிடத் திட்டமிடுகிறார்களாம் மணிரத்னம்.