நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முதலில் தொற்று இல்லை எனக்கூறப்பட்ட ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவிற்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு இருந்த இவர்கள் தற்போது திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடல் நலம் தேறி தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அமிதாப் பச்சனுக்கு அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டடது.  இதையடுத்து எம்.பி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்,மற்றும் ஆராத்யா ஆகியோருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. 

அதில் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவருக்கும் அறிகுறி தென்பட்டதால் இவர்கள் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட போதிலும் எந்த அறிகுறியும் இல்லாததால், வீட்டிலேயே அவர்கள் தனிமை படுத்தப்பட்டு உரிய சிகிச்சை பெற்று வந்தனர்.\

இதைத்தொடர்ந்து, ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகளுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, அவர்கள் திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த, நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகள் ஆராத்யா இருவருக்கும் கொரோனா நெகடிவ் என வந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாக அபிஷேக் பச்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தானும் தந்தையும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.