நீண்ட நாட்களுக்கு பின் 'ரன்பீர் கபூர்ருக்கு' ஜோடியாக பாலிவுட் படத்தில் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார், நடிகை ஐஸ்வர்யா ராய்.

இந்த திரைப்படத்திற்கு பின் ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கி வரும் வேலை இல்லா பட்டதாரி, படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு கடைசியில் அது கை கூடாமல் போனது. 

தற்போது, தெலுங்கு சூப்பர்ஸ்டார், சிரஞ்சீவி நடிக்க உள்ள வரலாற்றுப் படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த  'கைதி நம்பர் 150 ' படத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடிக்க உள்ள வரலாற்றுப் படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் ”உய்யலவாடா நரசிம்ம ரெட்டி” என்ற சுதந்திர போராட்ட வீரரின் கதை என்பதால், படத்தில் சிரஞ்சீவிக்கு கதாநாயகியாக நடிக்கும் நடிகை சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவராக இருக்க வேண்டும் என படக்குழு முடிவெடுத்துள்ளது. 

எனவே இந்த கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராய் பொருத்தமானவராக இருப்பார் என்பதால், இது குறித்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் தற்போது வரை ஐஸ்வர்யா ராய் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

இதற்கு முன்னால் பல தெலுங்கு படங்களில் ஐஸ்வர்யா ராய் கெளரவ வேடங்களில் தோன்றி இருந்தாலும், அவர் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு படம் இதுவாகவே இருக்கும். சிரஞ்சீவியின் படம் என்பதால், ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.