பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரு தினங்களே இருக்கும் நிலையில் மிகவும் மந்தமாக போய்க்கொண்டிருக்கிறது பிக் பாஸ் வீடு. பிக் பாஸும் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடுவதாக தெரியவில்லை. பிக் பாஸ் பார்த்து தூக்கம் வராமல் தவித்த நாட்கள் போய், தூக்கம் வரலப்பா அந்த பிக் பாஸ் போடு . என சொல்லுமளவிற்கு மாறி இருக்கிறது இப்போதைய பிக் பாஸ் வீடு.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சமீபத்திய பிரமோ ஒன்று பழைய பிக் பாஸை நினைவுபடுத்துவது போல அமைந்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் மறுபடியும் நுழைந்திருக்கும் யாஷிகா மற்றும் மகத் ஆகியோர் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து முதுகுக்கு பின்னால் பேசும் வேலையை பார்க்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் யாரிடம் வேண்டுமானாலும் பேசுவேன் ஆனால் டேனியிடம் மட்டும் பேசவே மாட்டேன் என முன்னரே யாஷிகா தெரிவித்திருந்தார். இப்போதும் அதே போல டேனியை பற்றி தான் வெறித்தனமாக புறம் பேசிக் கொண்டிருக்கின்றனர் யாஷிகவும் மகத்தும். 

பிக் பாஸில் டேனி தான் அதிகம் புறம் பேசினார் என்பதை போல இருக்கிறது இவர்களின் பேச்சு. ஏற்கனவே சர்வாதிகாரி டாஸ்கின் போது ஐஸ்வர்யாவிடம் பாலாஜி பற்றி போட்டுக்கொடுத்ததும் டேனி தான்.டேனியால் தான் ஐஸ்வர்யா இப்படி எல்லாம் நடந்து கொண்டார் என நியாயப்படுத்த முயல்வது போல இருக்கிறது இவர்களின் பேச்சு. 

டேனி செய்ததும் தவறுதான். அதே சமயம் இவர்கள் செய்தது மட்டும் சரியாகிவிடுமா? டேனி மட்டும் தான் இவர்கள் செய்த தவறுக்கு காரணம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் சரியாகும்? எது எப்படியோ மொத்தத்தில் மறுபடியும் புறம் பேசுவது திட்டுவது என சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது பிக் பாஸ் வீடு. அது தானே பிக் பாஸுக்கும் தேவை.