Asianet News TamilAsianet News Tamil

போன வருடம் பரதம்...! இந்த வருடம் பாட்டு...! ஐஸ்வர்யா தனுஷின் புது முயற்சி

aishwarya dhanush womans day song
aishwarya dhanush womans day song
Author
First Published Mar 10, 2018, 7:33 PM IST


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் சிறந்த குடும்பத்தலைவியாக எப்படி குழந்தைகளையும், கணவரையும் அன்பாக பார்துக்கொள்கிறாரோ அதே போல் திரைப்படம் இயக்குவது ஆடல், பாடல் என தனக்கு பிடித்தவற்றை தேர்வு செய்து கலக்கி வருகிறார். aishwarya dhanush womans day song

கடந்த வருடம்:

இவர் கடந்த ஆண்டு உலக மகளிர் தினத்தன்று ஐக்கிய நாட்டு சபையில் இவருடைய பரதநாட்டிய நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதரகத்தின் சார்பில் பரதம் ஆடிய முதல் பெண் என்கிற பெருமையை பெற்றார். 

ஆனால் இவர் கடந்த வருடம் அங்கு ஆடிய நடனம் சமூக வலைத்தளத்தில் அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. aishwarya dhanush womans day song

இந்த வருடம்:

இந்த நிலையில் இந்த வருட மகளிர் தினத்தில் பாடல் ஒன்று பாடியுள்ளார். இளையராஜாவின் மகள் பவதாரணி இசையில் உருவாகி இருக்கும் இந்த மகளிர் தின ஸ்பெஷல் பாடலை ஐஸ்வர்யா தனுஷ் பாடியுள்ளார். aishwarya dhanush womans day songஇந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்படிப்பட்ட வரவேற்பு உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Follow Us:
Download App:
  • android
  • ios