பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று என்ன நடக்க போகிறது? மக்கள் அனைவரின் வெறுப்பை சம்பாதித்த நடிகை ஐஸ்வர்யாவிடம், பொது மக்கள் தரப்பில் இருந்து என்ன கேள்வி எழுப்புவார் எனபதே அனைவரின் எதிர்ப்பார்ப்புக்கு காரணம் என கூறலாம்.

இந்த வாரம் ஐஸ்வர்யா ஏற்று செய்த சர்வாதிகாரி டாஸ்க்கில், தன்னை பற்றி பின்னால் சென்று பேசியவர்களை இவர் பழிவாங்குவார் என பார்த்தல்,  இவர் செய்த காரியங்கள் அத்து மீறியது. ஆனால் கடைசியில் எல்லாம் உங்க நன்மைக்காகதான் செய்தேன். லக்ஸரி பட்ஜெட்டுக்காகதான் செய்தேன். என கூறி சரண்டராகி இருக்கும் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

இந்நிலையில் நேற்று கூட பிக் பாஸ் வீட்டினுள் வந்த சதீஷ் ஐஸ்வர்யாவிடம் இது குறித்து பேச, அப்செட் ஆகி விட்டார் ஐஸ்வர்யா. தொடர்ந்து சக போட்டியாளர்கள் அவரை சமாதனப்படுத்தினார். தற்போது இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான லேட்டஸ்ட் பிரமோ வெளியாகி இருக்கிறது.

அதில் கமல் முன்னிலையில் சென்ராயன் எதோ கூறுகிறார். இதற்கு ஐஸ்வயா தான் கமல் சாருக்காக இங்க வாயை மூடி கொண்டு அமர்ந்திருப்பதாக கூறிகிறார். இதனை கேட்ட கமல் தான் அணிந்திருந்த கோட்டை கழற்றி விட்டு, தனக்காக யாரும் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டாம் நீங்கள் பேசுங்கள் என கூறுகிறார். 

உடனே ஐஸ்வர்யா சுதாரித்து கொண்டு, இந்த வார்த்தை பேசலாமா என தன்னுடைய சத்தத்தை குறைக்கிறார். பின் கமல் கோபமாக சர்வாதிகாரி டாஸ்க் முடிந்து விட்டது. இப்போது இங்கு இருப்பது ஐஸ்வர்யா என கூறுகிறார். இதனால் இந்த நிகழ்ச்சியின் மீதான சுவாரிஸ்யம் மேலும் அதிகரித்துள்ளது.