airtel announces new offer against jio that too in 5 rs difference

5 ரூபாயில் முந்திய ஏர்டெல்...! டேட்டா சலுகை கொடுத்து ஆப்பு வைத்த ஜியோ...!

ஜியோ-வை பொறுத்தவரை இலவச டேட்டா முதல் இலவச கால்ஸ் என அனைத்தும் ப்ரீ ப்ரீ ப்ரீ என சலுகை மேல் சலுகை வழங்கியது.

சொல்லப்போனால், ஜியோ வந்த பிறகு தான்,மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள்,டேட்டா சலுகை முதல் ப்ரீ கால்ஸ் வரை அனைத்தும் சலுகையாக மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டது.

மேலும், தற்போது மிக குறைந்த விலையில்,பல ஆபர்களை வழங்க தொடங்கி உள்ளது பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

இந்நிலையில்,ஜியோவிற்கு நிகராக ஏர்டெல் குறுகிய கால சலுகையாக அதிரடி சலுகையை அறிவித்து உள்ளது 

அதன்படி,

ஏர்டெல் ரூ.93

டேட்டா - 1 ஜிபி

கால அவகாசம் - 10 நாட்கள்

ஜியோ ரூ.98

டேட்டா - 2.1 ஜி பி

கால அவகாசம் -14 நாட்கள்

என்னதான் ஏர்டெல் ஜியோவிற்கு நிகராக பல சலுகைகளை வழங்கினாலும்,ஒப்பிட்டு பார்க்கும் போது ஜியோ வழங்கும் சலுகை தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.