கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கோலமாவு கோகிலா படத்திற்கு பின் மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் 'ஐரா' . 

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கோலமாவு கோகிலா படத்திற்கு பின் மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் 'ஐரா' .

இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நாளை இந்த படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 

நயன்தாரா முதல்முறையாக பவானி, யமுனா என்ற இரட்டை வேடத்தில் நடித்துள்ளதால் 'ஐரா' படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாளை வெளியாக உள்ள இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை, விஜய் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது என்பதை அதிகார பூர்வமாக சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளனர்.

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் நயன்தாராவின் பவானி கேரக்டரின் கணவராக கலையரசன், நடித்துள்ளார். 

Scroll to load tweet…

மேலும் யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் சுதர்சன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார்.