பிரபல முன்னணி நடிகரின், திரைப்படமான 'ஏஜெண்ட்' திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.     

இளம் ஹீரோக்களில் ஒருவரான அகில் அக்கினேனி மற்றும் ஸ்டைலிஷ் மேக்கர் சுரேந்தர் ரெட்டி கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியன் திரைப்படமான “ஏஜெண்ட்” திரை வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். ஏஜெண்ட் 2023 ஆம் ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வருகிறது. இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் நாயகன் அகில் ஒரு அதிரடி வீரனாக உளவாளி பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கதாப்பாத்திரத்திற்காக அவர் தன்னை உருமாற்றிக்கொண்ட விதம் நம்மை வியக்க வைக்கிறது. இப்படத்தின் வெளியீட்டு குறித்த அறிவிப்புடன் வெளியான புதிய போஸ்டரில் அகில் கோட் சூட்டுடன் ஒரு நவீன, ஸ்டைலான ஏஜென்டாக நின்று கொண்டிருப்பது, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறியுள்ளது.

டீசரில் காட்டப்பட்ட அகிலின் அதிரடி ஆக்சன் பாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அட்டகாசமான டீசரை அடுத்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது. அகிலின் காதலியாக சாக்‌ஷி வைத்யா நடித்துள்ளார். நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரசூல் எல்லோர், ஒளிப்பதிவு செய்ய, ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். 

இப்படத்திற்கு கதை வசனத்தை வக்கந்தம் வம்சி வழங்கியுள்ளார். ஏ.கே. எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் சுரேந்தர் 2 சினிமாவின் சார்பில் ராமபிரம்மம் சுங்கரா இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பாளராகவும், அவினாஷ் கொல்லா கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இப்படத்தை அஜய் சுங்கரா, பதி தீபா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பாளராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.