சமுத்திரக்கனி இயக்கத்தில் தமிழில் வெற்றிப் பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படம் ‘அப்பா’.

இந்த படம் மலையாளத்தில் “ஆகாச மிட்டாயி” என்ற பெயரில் ரீமேக்காகியுள்ளது.

பொதுவாக தமிழில் இருந்து மலையாளத்தில் ஒரு படம் ரீமேக் ஆவது என்பது அரிதே. இதற்குமுன் சமுத்திரக்கனியின் ‘நாடோடிகள் படம் அந்த சாதனையை செய்திருந்தது. இப்போது அதே சமுத்திரக்கனியின் ‘அப்பா’ படமும் அந்த சிறப்பை பெற்றுள்ளது.

ஒரு நடிகராக மலையாள சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்து விட்ட சமுத்திரக்கனி, இந்த ‘ஆகாச மிட்டாயி’ படத்தை இயக்கியதன் மூலம் ஒரு படைப்பாளியாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

படத்தின் கதாநாயகனாக ஜெயராம் நடித்துள்ளார். கதாநாயகியாக இனியா நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த செய்தியை நடிகர் ஜெயராம் மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் பகிர்ந்தார்.