சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நாயகனாக இருந்தாலும், இவருக்கு நிறைய ரசிகர்களை ஏற்படுத்தி கொடுத்தது விமலுடன் இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் தான்.
இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆனது, தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பையும் தாண்டி பாடவும் ஆரமித்துள்ளார்.
ஆனால் இது வரை சிவகார்த்திகேயன் தான் நடித்த படங்களை தவிர வேறு எந்த படத்திலும் பாடியது இல்லை ஆனால், கேடி பில்லா கில்லாடி ரங்காவின் நடித்த போது நண்பராக மாறிய விமலுக்காக அவருடைய படத்தில் பாட சம்மதித்துள்ளாராம்.
இதனால் விமல் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் மன்னர் வகையறா படத்தில் மீண்டும் சிவகார்த்தியன் விமல் இருவரும் இணைத்துள்ளனர்.
