again will join thamanna and prabas pair
நயன்தாரா நடித்து அடுத்து வெளியாக இருக்கும் படம் கொலையுதிர் காலம். இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்கள். இந்தியில் இதற்கு காமோஷி என பெயரிடப் போகிறார்கள். இதில் இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவாவுடன் நடிகை தமன்னா இணைந்து நடிக்க உள்ளார். பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் இதில் கவுரவ தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே பிரபாஸ் மற்றும் தமன்னா ஜோடி பாகுபலியில் நன்றாக இருந்தது என ரசிகர்கள் கூறிவரும் நிலையில் இவர்கள் மீண்டும் சேர்ந்து நடிப்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர் பார்க்க படுகிறது. ஏற்கனவே பிரபு தேவா நடித்த ஒரு இந்தி படத்தில் பிரபாஸ் கவுரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தையும் சேர்த்து இந்தியில் பிரபாஸ் இரண்டு படங்களில் நடிக்கிறார். இயக்குனர் சக்கிரி டோலிடி இப்படத்தை இயக்குகிறார். இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரம் என்கிறார் இயக்குனர். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜ இசை அமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் வெளியிடுகிறார்கள். படம் இந்த வருட கடைசியில் திரையிட இருக்கிறார்கள்.
