காதலித்து இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு, ஒரு வருடத்தில் விவாகரத்து பெற்றார் நடிகை அமலாபால். இவர்களுடைய விவாகரத்து சம்பவம் ரசிகர்களை மட்டும் அல்ல பல திரையுலக பிரபலத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

விஜயை பிரிந்து சுதந்திரமாக இருக்கும் அமலாபால், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் தற்போது அமலாபால் விவாகரத்து பெற்ற முன்னாள் கணவர் ஏ.எல். விஜய்யுடன் சேர்ந்து வாழ வாய்ப்புள்ளதா என்பது குறித்து மனம்திறந்துள்ளார்.

அவர் பேசும்போது, விஜய்யும், நானும் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா என்று தெரியவில்லை. நானும், விஜய்யும் வாழ்வின் வேறு நிலையில் சந்தித்திருந்தால் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்போம்.

எனக்கு விஜய் மீது எந்த கோபமும் கிடையாது. இன்னும் அவர் தான் எனக்கு பிடித்த நபர் என்று அமலா கூறியுள்ளார்.