உலக அளவில் தன்னுடைய இனிமையான குரலால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த, பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு, ஆகஸ்ட் 5 ஆம் தேதி, கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து, வீடியோ வெளியிட்ட அவர், மிகவும் லேசான அளவில் தான் கொரோனா தொற்று உள்ளது. இருப்பினும் மற்றவர்கள் நலன் கருதி, தன்னை தானே மருத்துவ மனையில் தனிமை படுத்தி கொண்டதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து இவருடைய உடல் நிலை ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று கவலை கிடமாக உள்ளதாகவும், ஐ.சி.யூ வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. தற்போது எஸ்.பி.பிக்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கட்டு வருகிறது.

இவருடைய உடல் நலன் சீராகி, மீண்டும் பல பாடல்களை இவர் பாட வேண்டும் என, இவருடைய ரசிகர்கள், திரைபரபலன்கள், மற்றும் இசை கலைஞர்கள் என பலர் ஒன்று கூடி, கடந்த 20 ஆம் தேதி எஸ்.பி.பிக்காக கூட்டு பிரார்த்தனை செய்தனர். அதன் பலனாக தற்போது இவருடைய உடல் நிலை சீராக உள்ளதாகவும், 90 சதவீதம் எஸ்.பி.பி மயக்க நிலையில் இருந்து மீண்டு விட்டதாக எஸ்.பி.பி சரண் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் எஸ்.பி.பிக்காக கூட்டு பிரார்த்தனை ஒன்று நடைபெற உள்ளது. இதுகுறித்த போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 27 ஆம் தேதி, அதாவது நாளை 6 மணி முதல் 6 :30 மணி வரை நடைபெற உள்ள இந்த கூட்டு பிராத்தனையில் உலகில் எந்த நாட்டில் இருந்தாலும், மொழி, இனம், மதம் ஆகியவற்றை கடந்து பிராத்தனை செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது போன்ற எண்ணற்ற ரசிகர்களின் பிரார்த்தனையால் விரைவில், எஸ்.பி.பி பூரண நலம் பெற்று வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.