கேள்விகுறியான "2.o" படம்..! கிராபிக்ஸ் நடந்து வந்த நிறுவனத்திற்கு சீல்...!  

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் எமி ஜாக்சன் நடித்து வெளிவர உள்ள பாடம் "2.o". இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து பல மாதங்கள் ஆகிய நிலையில் சென்ற ஆண்டு இதற்கான் பிராமாண்ட இசை வெளியீட்டு விழா துபாயில் கோலகலமாக நடந்தது.

அதன் பின்னர் இந்த ஆண்டு, "2.o" வேலையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையல், மீண்டும் தள்ளிப்போகும் நிலை உருவாகி உள்ளது. இதற்கு முன்னதாக, நவம்பர் 29ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் ஷங்கர் அறிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டிங் மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் லண்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில் நடைப்பெற்று வருகிறது. 

இந்நிலையில், கிராபிக்ஸ் பணிகளை மேற்க்கொண்டு வரும் லண்டன் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் '2.o' இந்த ஆண்டும் வெளிவராது என தெரியவந்துள்ளது. '2.o' படத்தின் இயக்குனர் ஷங்கர், கமலை வைத்து  இந்தியன் 2 படம் இயக்க ஆயத்தமாகி வருகிறார். இந்நிலையில், லண்டன் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதால் பணிகள் நடைபெறுவதில் மீண்டும் இழுபறி நிலவுகிறது. எனவே எப்போது '2.o' வெளியாகும் என்ற ஏக்கம் இயக்குனர் ஷங்கருக்கு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படம் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால், ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.