நடிகர், நடிகைகளுக்கு இடையே காதல் வருவதும் போவதும் சர்வ சாதரணம் தான்.
ஆனால், நடிகர் சிம்புவை பற்றி இல்லாத விஷயங்களையும் கதை கட்டி விடுவது புதிதல்ல.
காரணம் இவர் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குவதுதான்.
இவர் ஏற்கனவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் ஆனா இரண்டு பேரை தன் காதல் வலையில் விழ வைத்து, பின் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் அந்த காதல் தோல்வியில் முடிந்தது.
தற்போது லேட்டஸ்ட்டாக இவர் காதல் வலையில் பிரபல நடிகரின் மகள் என கிசுகிசுக்கப்படுகின்றது.
இவரும் ஹீரோயின் தான், கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என கலக்கி வருபவர்.
பொதுவாகவே சிம்பு எந்த விஷயத்தையும் போட்டு உடைப்பவர், இது உண்மையாக இருந்தால் தானாக முன் வந்து ஒற்றுக்கொள்வர் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.
