டிடி ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் நிகழ்சிகளை தொகுத்து வழங்க உள்ளார்.

தனது சுட்டித்தனத்தாலும், துரு துரு பேச்சாலும் டிடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனவர்

தற்போது டிடி பல படங்களில், நடித்து வருகிறார். கெளதம் மேனன்  இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்திலும், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள "சர்வ தாளமயம்" படத்திலும் நடித்து வருகிறார் டிடி.

முறிந்து போன திருமண வாழ்க்கை

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி திருமணம்  நடைபெற்றது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில்,மீண்டும் ‘என்கிட்ட மோதாதே’ என்ற இந்த நிகழ்ச்சியின் மூலமாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் டிடி

வருகிற சனிக்கிழமை முதல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் இந்த   நிகழ்ச்சியில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நட்சத்திரங்கள் தான்  போட்டியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.