கோலிவுட் திரையுலகில் சினிமா பயணத்தை துவங்கி, பாலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த மாதம் துபையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பாத் டப்பில் மூழ்கி உயிரிழந்தார். 

இவருடைய மரணம் ஒட்டு மொத்த திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. 

இந்நிலையில் இவருடைய மரணத்திற்கு பின், கணவர் போனி கபூரின் சகோதரர் அனில் கபூர் மகள் சோனம் கபூருக்கு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது. 

சோனம் கபூர் காதல்:

பிரபலங்கள் பரவலாக தங்களுடைய திருமணத்தை வெளிநாட்டில் நடத்த திட்டமிடுகின்றனர். சமீபத்தில் கூட நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி வெளிநாட்டில் திருமணம் செய்துக்கொண்டனர். அதே போல் நடிகை சோனம் கபூர் திருமணம் ஜெனிவாவில் வரும் மே மாதம் 12 தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது

இவர் பலர் வருடங்களாக காதலித்து வரும் ஆனந்த் என்பவரை கரம்பிடிக்க உள்ளார். இவர்களுடை திருமணம் ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வந்த போது ஸ்ரீதேவி திடீர் என மரணமடைந்தார். தற்போது மீண்டும் இவர்களுடைய திருமண ஏற்பாடு சூடு பிடித்துள்ளது. 

தனுஷ் நாயகி:

பாலிவுட் முன்னணி நடிகையான சோனம் கபூர், நடிகர் தனுஷ் முதல் முதலாக நடித்த பாலிவுட் படமான 'ராஞ்சனா'வில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.