Asianet News Tamil

சுஷாந்த் மரணத்தால் சிக்கலில் மாட்டிய சோனம் கபூர்...பச்சை பச்சையாக குவியும் கமெண்ட்களால் எடுத்த அதிரடி முடிவு!

பாலிவுட்டில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். புதிதாக வருபவர்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் வளரவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துவருகிறது.

After Sushant Fan Troll post Actress Sonam kapoor  Off Social media Comment
Author
Chennai, First Published Jun 17, 2020, 8:10 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுகிழமை மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பாலிவுட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படும் நிலையில், இதுவரை அவருடைய வீட்டில் இருந்து கடிதம் ஏதும் கைப்பற்றப்படாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான சஞ்சய் நிருபம் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டிருந்தார். 

 

இதையும் படிங்க: நடிகர் சுஷாந்த் தற்கொலையில் அதிரடி திருப்பம்: சல்மான் கான் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு...!

கடந்த ஆண்டு சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான  சிச்சோரே படத்திற்கு பிறகு அவர் 7 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்ததாகவும், கடந்த 6 மாதங்களில் சுஷாந்த் கைவசம் இருந்த அத்தனை படங்களும் கைநழுவி போனதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனால் சுஷாந்திற்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியானது. 

 

இதையும் படிங்க: ஸ்ருதி ஹாசனின் ஒருநாள் சம்பளம் இத்தனை லட்சமா?... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சங்கதி...!

பாலிவுட்டில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். புதிதாக வருபவர்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் வளரவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலிவுட் ரசிகர்கள் ஆலியா பட், சோனம் கபூர், சாரா அலிகான், சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்டோரை சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர். தனது சோசியல் மீடியா பக்கங்களில் பச்சை பச்சையாக குவியும் கமெண்ட்களையும், ட்ரால் போஸ்ட்களையும் பார்த்து பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனம் கபூர் நொந்துவிட்டார் போல் தெரிகிறது. அதனால் தனது சோசியல் மீடியா பக்கங்களில் உள்ள கமெண்ட் ஆப்ஷன்களை தற்காலிகமாக முடக்கியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios