தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு உலக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவருடைய படம் குறித்து எந்த ஒரு தகவல் வந்தாலும் அதனை ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள்.

இவர்களுக்கு பாலிவுட் நடிகர்கள் கூட ரசிகர்கள் தான். மேலும் இவருடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்பது தான் தற்போதைய பல இளம் இயக்குனர்களின் கனவு. இதனை பல இயக்குனர்கள் வெளிப்படையாகவே கூறியுள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் திறமையான இளம் இயக்குனர்களுக்கு தன்னுடைய படத்தை இயக்கும் வாய்புகள் கொடுத்து வருகிறார்.  

அதிக ரசிகர்கள் கொண்ட விஜய் - அஜித்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தங்களுக்கென அதிக ரசிகர்களை கொண்டவர்கள் தல அஜித் மற்றும் விஜய் தான். இவர்கள் இருவரின் படத்திற்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனாலும் ரஜினியை தொடர்ந்து அடுத்த இடத்தில் இருப்பது யார் என்கிற விடைகண்டுபிடிக்க முடியாத ஒரு கேள்வி பல வருடங்களாக இருந்து வருகிறது. 

இந்த கேள்விக்கு பதில் கண்டுபிடிக்கும் விதத்தில், மூத்த பத்திரிக்கையாளர்களிடம் ரஜினியை தொடர்ந்து அதிக வசூல் செய்வது விஜய் படங்களா அல்லது அஜித் படங்களா என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இந்த கேள்விக்கு பத்திரிக்கையாளர்கள் விஜய் என்று கூறி அதற்க்கான காரணத்தையும் கூறியுள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "அஜித்துக்கு மாஸ் காட்டும் பல இளைஞர்கள் ரசிகர்கள், இதனால் முதல் மூன்று நாட்களுக்கு இவர்கள் தான் படத்தை பார்ப்பார்கள். படம் சிறப்பாக இருந்தால் தொடந்து இந்த படத்திற்கான வரவேற்ப்பு அதிகரிக்கும்' ஆனால் விஜய் படங்களுக்கு அப்படி இல்லை இவருடைய படத்திற்கு 'பேமிலி ஆடியன்ஸ்' அதிகம். இதன் காரணமாக இவருடைய படம் நின்று ஓடும் என தெரிவித்துள்ளனர்.

எனினும் சிறப்பாக எடுக்கப்படும் அனைத்து படங்களுமே ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்ப்பை பெரும் என்று தெரிவித்துள்ளனர்.