இப்படத்தில் தல மட்டுமல்ல, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா செம்ம கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.  அதுவும் அஜித்துடன் காதல், சண்டை, குழந்தை மீதான பாசம் என ரசிக்க வைக்கிறார். 

அஜித் படம் ரிலீசானால் எப்படியும் ஒருவாரம் ரசிகர்களே திரையரங்கை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். ஆனால் இரண்டாவது நாளிலிருந்தே ஃபேமிலியாக ரசிகர்கள் திரையரங்கிற்கு படம் பார்க்க வருவது படத்தின் வெற்றியை தீர்மானித்திருக்கிறது.

இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு  ஒரு தியேட்டருக்கு மாற்றுத்திறனாளி பெண் விஸ்வாசம் படம் பார்க்க வந்ததை யாரோ போட்டோ எடுத்துள்ளனர். வலைத்தளங்களில் வைரலாகும் இந்த புகைப்படம் அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல பார்ப்பவர்களையும் கலங்க வைத்துள்ளது. இப்படி, பெண்களும், பெண் குழந்தைகளும் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வருவது தான் படத்தின் வெற்றியை தீர்மானித்திருக்கிறது. 

இளைஞர்கள் மட்டும் வந்த விஸ்வாசம் படத்திற்கு குடும்பங்களும் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். பார்க்காதவர்களே கண் கலங்கும் போது பார்த்தவர்கள் சந்தோஸத்தில் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றார்கள்.  ரஜினி படத்துக்கு கூட தல, தன்னோட படத்த ரிலீஸ் பன்னதே சூப்பர்! அதுலயும் தமிழ்நாட்டுல விஸ்வாசம் தான் அதிக வசூல், தமிழ்நாட்டுல "தல"க்கு தான் ரசிகர்கள் அதிகம்.

விஸ்வாசம் பார்த்துவிட்டு கண்களில் கண்ணீர் வராமல் யாரும் வெளியே வரமுடியாது. கதை ஒன்றும் புதுசில்லை, ஆனாலும் மனசை ஏதோ வருடுகிறது. இமானின் மெல்லிசை அற்புதம். அஜித்திற்கு பேர் சொல்லும் ஒரு படம். நயன்தாரா அழகு இப்படி விஸ்வாசம் படம் தாறுமாறாக வெற்றிபெற வேண்டிய அனைத்தும் உள்ளது.

சிவாஜி சாவித்திரி நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் அடித்த கிளாசிக் படமான பாசமலர் படத்தை  திரும்ப திரும்ப பார்த்ததைப்போலவும், படம் பார்த்தவர்களே, படத்திற்கான விளம்பரம் செய்து தியேட்டருக்கு அனுப்பி வைத்ததைப்போலவே, இப்போது அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு நடந்து வருகிறது.