after long days ago dd anchoring surya program
பிரபல தொகுப்பாளினி டிடி என்ன செய்தாலும் அவர் எப்படிப் பேசினாலும் அதனை ரசிக்க தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் சிரித்துக் கொண்டே கலகலப்பாக பேசுவது பலருக்கும் பிடிக்கும். பல தனியார் தொலைக்காட்சிகளில் ஏராளமான தொகுப்பாளர்கள் வந்தும் இது வரை டிடியின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை என்றே கூறலாம்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய கணவர் ஸ்ரீகாந்திடம் இருந்து விவாகரத்து பெற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். டிடி.,க்கு திருமணமான ஓரிரு வருடங்களிலேயே இவர் இப்படி ஒரு முடிவை எடுத்தது இவருடைய ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது இவர் பிரபல நடன இயக்குனர் சதீஷுடன் பப்பில் வித்தியாசமாக நடனமாடியதும் சிறு சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே டிடி விவாகரத்து மனு தாக்கல் செய்தது முதல், எந்த ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்தார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் தற்போது இவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு, சூர்யா நடித்து பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியாக உள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படம் குறித்து சூர்யா தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் நிகழ்ச்சியை சூர்யாவிற்காக தொகுத்து வழங்க வருகிறாராம்.
இதனால் சூர்யா ரசிகர்களும், டிடி ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
