After Kaatru Veliyidai Aditi Rao Hydari and Mani Ratnam team up yet again
சமீபத்தில் வெளியான "காற்று இடைவெளிடை" எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை அதே போல இரண்டு விதமான விமர்சனங்கள் வந்து. கார்த்தி இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்தார். இதற்காக கடும் உழைப்பையும் கொடுத்தார். இந்த படத்தை வெற்றி பெறவைக்க பல ஊர்களுக்கு ப்ரமோஷனுக்கு போனார் இருந்து பலன் இல்லாமல் போனது.

இதற்கு முக்கிய காரணம் அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார் காட்சிகள் எதுவும் புதுசா இல்லை என்றும் புலம்பிதள்ளினர். இந்த படத்தை பொறுத்தவரை ஒரே அறுதல் என்றால் படத்தின் நாயகி என்று தான் சொல்லணும் அதுனால் என்னமோ மீண்டும் இந்த நாயகியை அடித்த படத்துக்கும் இவர் தான் நாயகியாம்.
மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தில், கார்த்தி ஜோடியாக நடித்தவர் அதிதி ராவ். ஹைதராபாத்தில் பிறந்தவராக இருந்தாலும், ஹிந்திப் படங்களில்தான் நடித்துள்ளார்.இந்தப் படத்தில் நடித்தபோது, அதிக டெடிகேஷனாக இருந்தாராம்.

அதிதி. தமிழ் கற்றுக் கொள்வதில் தொடங்கி, சின்னச் சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தினாராம்.
இதனால், மணிரத்னத்துக்கு அவரைப் பிடித்துவிட்டதாம். அடுத்து அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ஜோடியை இயக்குவதா? அல்லது ராம் சரண் - அரவிந்த் சாமி படத்தை இயக்குவதா? என்று குழம்பிக் கொண்டிருந்த மணிரத்னம், தெளிவான முடிவை எடுத்துவிட்டார்.
முதலில் ராம் சரண் அரவிந்த் சாமி படம் என்பதுதான் அந்த முடிவு. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக காற்று வெளியிட படத்தின் நாயகி அதிதி ராவையே நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் மணிரத்னம் என்கிறார்கள்.
