After Kaala release Rajinikanth change his political dialogue
தான் முழுசாக நம்பியிருந்த காலா கம்பி நீட்டியதால், இனி நடிக்கும் படங்களில் அரசியல் வேண்டாம் என்று ரஜினி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான“காலா” ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் பல தரப்பினரை எரிச்சலடைய வைத்தாலும், ரஜினியின் அரசியல் வருகைக்காக உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினி நினைத்தது ஒன்று, நடந்ததோ வேறொன்று.
ஆமாம், ரஜினி அரசியலுக்காக ரஞ்சித்தை பயபடுத்துவதாக சொன்னாலும், தான் சொல்லவந்த கருத்தை ரஜினி மொன்ற மாஸ் ஹீரோவை வைத்து பக்கவாகவும், அழுத்தமாக சாதாரண மக்களுக்கும் பரிமாரிவிட்டார்.
சரி விஷயத்துக்கு வருவோம், தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் பிஸியாக இருக்கும் ரஜினி இப்படத்தில் படப்பிடிப்பிற்காக டார்ஜிலிங்மலைப் பகுதியில் நடந்து வருகிறது. இப்படத்தில் மொத்தம் 30 நாட்கள் மட்டுமே ரஜினி நடிக்கிறார். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் நடக்கயிருக்கிறது. இதில், ரஜினிக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் வசனம், காட்சி எதிலுமே அரசியல் வேண்டாம் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் கறாராக ரஜினி சொல்லிவிட்டாராம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான “காலா” படத்தில் ரஜினிகாந்த் பேசிய அழுத்தமான அனல் வீசும் அரசியல் வசனங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை, மாறாக ரஞ்சித்தை தூக்கி நிறுத்தியது. இதனால் கடுப்பான ரஜினிகாந்த். இனி வரும் படங்களிலும் அரசியலே வேண்டாம் என்று கூறிவிட்டாராம். மேலும், தற்போது டார்ஜிலிங் மலைப்பகுதியில் 30 நாட்கள் படப்பிடிப்பை முடித்த பிறகு சென்னை திரும்பும் ரஜினிகாந்த் அங்கு தனது கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். அதன் பிறகு கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றை அறிவிக்கலாம் என பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறாராம்.
