கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபல நடிகராக இருந்தவர்  ரகுமான், கடந்த சில வருடங்களாக வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக உள்ளார். இந்நிலையில் மீண்டும் அவர் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் 'துருவங்கள் 16'

இந்த படத்தின் வெற்றி ரகுமானுக்கு மீண்டும் திரையுலகில் ஒரு அந்தஸ்தை கொடுத்துள்ளது. இந்த படத்தில் அவருடைய நடிப்பை பாராட்டி பலர் போன் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவ்வாறு வந்த போன் அழைப்புகளில் ஒரே ஒரு அழைப்பு மட்டும் ரொம்ப ஸ்பெஷலாம். அதுதான் இளையதளபதி விஜய்யின் அம்மா ஷோபாவிடம் இருந்து வந்த போன்.

'துருவங்கள் 16' படத்தில் ரகுமானின் நடிப்பை ஷோபா மனம்விட்டு பாராட்டியதை ரகுமான் நெகிழ்ச்சியுடன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதே ரகுமான் தான் கடந்த 1986ல் வெளிவந்த 'நிலவே மலரே' படத்தில் நடித்திருந்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அவ்வபோது படப்பிடிப்பு தளத்திற்கு வரும் ஷோபா, ரகுமான் நடிப்பை பாராட்டுவாராம்.

தற்போது 30 வருடத்திற்கு பின் மீண்டும் விஜய் அம்மாவிடம் பாராட்டு பெற உதவிய இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு நன்றி என்று ரகுமான் நெகிழ்வுடன் கூறியுள்ளார்.