Asianet News TamilAsianet News Tamil

டிராப் ஆன படம்... 21 ஆண்டுகளுக்குப்பின் வெளியாகவிருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்

’96 படம் வந்த பிறகு சுமார் 96 சதவிகிதம் பேர் மலரும் நினைவுகளில் மூழ்க ஆரம்பித்துவிட்டார்கள். மீதி 4 சதவிகிதம் பேர் அதற்கான நேரம் கிடைக்காமல் இணையதளங்களுக்கு செய்தி அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.  டைரக்டர் ஷங்கரின் ஆஸ்தான உதவியாளரும் ‘நிலாக்காலம்’ ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களின் இயக்குநருமான ஏ.ஆர்.காந்திகிருஷ்ணாவின் ஒரிஜினல் முதல் படம் பற்றி இன்றைய தலைமுறையினர் பலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

after 21 years director a.r.gandhi krishna is releasing his 'engineer film song
Author
Chennai, First Published Nov 2, 2018, 9:30 AM IST

’96 படம் வந்த பிறகு சுமார் 96 சதவிகிதம் பேர் மலரும் நினைவுகளில் மூழ்க ஆரம்பித்துவிட்டார்கள். மீதி 4 சதவிகிதம் பேர் அதற்கான நேரம் கிடைக்காமல் இணையதளங்களுக்கு செய்தி அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.  டைரக்டர் ஷங்கரின் ஆஸ்தான உதவியாளரும் ‘நிலாக்காலம்’ ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களின் இயக்குநருமான ஏ.ஆர்.காந்திகிருஷ்ணாவின் ஒரிஜினல் முதல் படம் பற்றி இன்றைய தலைமுறையினர் பலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. after 21 years director a.r.gandhi krishna is releasing his 'engineer film song

அன்றைய தேதிக்கு இந்தியாவின் டாப் ஸ்டார்களாயிருந்த அர்விந்த்சாமி, மாதுரி தீக்‌ஷித் காம்பினேஷனில்,  97’ம் ஆண்டு தென்னிந்திய திரையுலகமே வியந்த மிக மிக பிரம்மாண்டமான அழைப்பிதழுடன் துவங்கப்பட்ட அப்படம் சில காரணங்களால் டிராப் ஆனது.

அந்த ஆறாத மனவேதனையை இன்று தனது முகநூல் பதிவில் கொட்டியிருக்கிறார் இயக்குநர் காந்தி கிருஷ்ணா.

‘இஞ்சினியர்’.

இயக்குநராக என் முதல் படம் (1997). பெரும்பகுதி முடிந்த படம், சிலபல காரணங்களால் தடைபட்டது.
15 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் பார்க்க நேரிட்டது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில், மறைந்த நண்பன் ஜீவாவின் ஒளிப்பதிவில், அமரகுரு சுஜாதா வசனத்தில், பத்மஸ்ரீ கவிப்பேரரசுவைரமுத்துவின் வரிகளில், பத்மஸ்ரீ தோட்டா தரணியின் கலை இயக்கத்தில்,.பிரம்மாண்டமாக வளர்ந்த படம். after 21 years director a.r.gandhi krishna is releasing his 'engineer film song

அரவிந்த்சாமி கதாநாயகன்.

'Hum Apke Hain Koun?' 'Dil To Pagal Hai' படங்களில் இந்தியாவைக் கலக்கிய காலத்தில் மாதுரி தீட்ஷித் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்ட படம் இன்ஜினியர். (தமிழில் மட்டுமல்ல, பிராந்திய மொழியில்  அவர் நடித்த ஒரே படம்)

நான் எழுதிய திரைக்கதைகளில் என் மனதிற்கு நெருக்கமானது.. 'இன்ஜினியர்'. எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் அது புதிய கதைதான். என்றேனும் ஒருநாள் அதைத் திரையில் கட்டாயம் காண்பிப்பேன்.

தற்போதைக்கு ஒரு சோறு பதமாக, ஒரு பாடல் காட்சியை விரைவில் இணையத்தில் வெளியிடலாமா? என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios