90 களில்,  விஜய், அஜித், அஜித், சூர்யா,  என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக, தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் சிம்ரன்.  திருமணத்திற்கு பின்,  சில காலம் நடிப்புக்கு இடைவெளி விட்டு,  ரீ-என்ட்ரி கொடுத்த இவர், கதைகளை தேர்வு செய்து நடித்த போதிலும், நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போனது .

இந்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான 'பேட்ட' படத்தில் இவருடைய நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.  இதனால் நாள் இவரை கண்டுகொள்ளாத தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் பார்வை சிம்ரன் மீது பட்டுள்ளது.

எனவே தற்போது,  வயதானாலும் சிம்ரன் காட்டில் நல்ல மழை பெய்ய தொடங்கியுள்ளது.  அந்த வகையில் தற்போது நடிகர் மாதவன் நடிக்க உள்ள "நம்பி நாராயணன்" படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சிம்ரன் மற்றும் மாதவன் "கன்னத்தில் முத்தமிட்டால்" "பார்த்தாலே பரவசம்" ஆகிய படங்களுக்கு பின் 17  வருடங்கள் கழிந்து இந்த படத்தின் மூலம் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர்.  இந்த  வயதான கேரக்டரில் நடிக்கும் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்தாலும் இவருடைய கேரக்டர் அனைவராலும் பேசும் படி இருக்கும் என கூறப்படுகிறது. அனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.