13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனுஷுக்கு ஜோடியான பிரபல நடிகை!
 
பாலாஜி மோகனின் ‘மாரி 2’ படத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் கால்ஷீட் டைரியில் கெளதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றிமாறனின் ‘அசுரன்’, இயக்குநர் ராம்குமார் படம் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ள படத்தில் தனுஷ் டபுள் ஆக்ஷனில் நடிக்கவிருக்கிறார். ஏற்கெனவே, இவர்கள் காம்போவில் வந்த ‘கொடி’ படத்திலும் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

ஆனால், ‘கொடி’யில் அண்ணன், தம்பியாக வந்த தனுஷ், இந்த படத்தில் அப்பா, மகன் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார். தற்போது, இதில் அப்பா கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க சினேகா கமிட்டாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2006-ஆம் ஆண்டு ரிலீஸான செல்வராகவனின் ‘புதுப்பேட்டை’யில் தனுஷ், சினேகா சேர்ந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.