நடிகை ஹன்சிகா நடிப்பில் விரைவில் மஹா திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இவர் சுமார் 10 வருடங்களுக்கு பின்னர்... நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. 

நடிகை ஹன்சிகா நடிப்பில் விரைவில் மஹா திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இவர் சுமார் 10 வருடங்களுக்கு பின்னர்... நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகை ஹன்சிகா தமிழ் திரையுலகின் குட்டி குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி, நடிப்பில் அசத்தி வந்த இவர் தற்போது பார்ட்னர், மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ் ஆகிய படங்களின் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

பட வாய்ப்புக்காக கொழுகொழுவென இருந்த ஹன்சிகா, ஓவர் ஸ்லிம்மாக மாறியும் பட வாய்ப்பு கிடைக்காததுதான் மிகப்பெரிய ஏமாற்றம் என்றும் கூறலாம். தற்போது தன்னுடைய 50வது படமாக உருவாகியுள்ள 'மகா' படத்தின் பணிகளும் கிட்டதட்ட முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் இந்த படம் குறித்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் தெலுங்கில் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க உள்ளார். குறிப்பாக சாதனை முயற்சியாக 105 நிமிடம் எடுக்கப்பட உள்ள படத்தில் ஒரே ஷாட்டில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஏற்கனவே இதுபோல் பல படங்கள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில படங்களில் ஹன்சிகா நடிக்க கமிட் ஆனாலும் முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகாமல் இருந்த நிலையில் தற்போது சுமார் 10 வருடங்களுக்கு பின் முன்னணி ஹீரோ ஒருவரின் படத்தில் ஹன்சிகா நடிக்க உள்ளார்.

இந்த படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளாராம். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் மொத்தம் மூன்று நாயகிகள் நடிக்க உள்ளதாகவும் அதில் ஒருவராக ஹன்சிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தனுஷுடன் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 'மாப்பிள்ளை' படத்தில் ஹன்சிகா நடித்துள்ள நிலையில், அதை தொடர்ந்து சுமார் 10 வருடங்களுக்கு பின் மீண்டும் தனுஷுடன் இணைந்து நடிக்க உள்ளார்.