பாலிவுட்டில் முன்னணி நடன இயக்குனராக இருக்கும் கணேஷ் ஆச்சாரியா, தன்னை ஆபாச வீடியோ பார்க்க வற்புறுத்துவதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா. இவர்  தமிழில் ரவுத்ரம் படத்தில் நடித்துள்ளார். கணேஷ் ஆச்சார்யா மீது 33 வயது பெண் ஒருவர் மகாராஷ்ராவில் பெண்கள் ஆணையம் மற்றும் அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில் நடன இயக்குனர் தனது வருமானத்திலிருந்து கமிஷன் கேட்டதாகவும் ஆபாச வீடியோக்களைப் பார்க்க கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தன்னைப் பற்றி வதந்திகளை பரப்பியதாகவும் நற்பெயரைக் கெடுத்ததாகவும் நடிகை தனுஸ்ரீ தத்தா கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார்.

ஏற்கனவே மூத்த நடன இயக்குனர் சரோஜ் கான் கணேஷ் ஆச்சார்யா தனது நடனக் கலைஞர்களை சுயலாபத்திற்கு பயன்படுத்துவதாகவும். சினிமா டான்சர்ஸ் அசோசியேஷனை (சிடிஏ) கேவலப்படுத்துவதாகவும் புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.