adukalam murugadoss baby birth



இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது பெற்ற திரைப்படம் "ஆடுகளம்".  இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு நண்பராக நடித்தவர் முருகதாஸ்.

இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது, இதனால் இவரை பலரும் "ஆடுகளம் முருகதாஸ்" என்று அழைக்கத்தொடங்கி விட்டனர்.

கடந்த வருடம் இவருக்கு திருமணம் நடைபெற்றிருந்த நிலையில் இவருக்கு  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த தகவலை அறிந்த பல பிரபலங்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விஜய்யின் கில்லி படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது மிகவும் அழுத்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருக்கு நியூஸ் பாஸ்டின் வாழ்த்துக்கள்.