அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் அஜித்குமார் விரைவில் நலம்பெற வேண்டி சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

நடிகர் அஜித் நேற்று காலை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதனிடையே நடிகர் அஜித்துக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அவருக்கு மூளையில் கட்டி இருந்ததாகவும், அதனால் அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சுமார் 4 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் ரசிகர்கள் பதறிப்போன நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித்துக்கு மூளையில் கட்டி என பரவும் தகவல் துளியும் உண்மையில்லை என்றும் அவருக்கு காதுக்கு அருகில் நரம்பில் வீக்கம் இருந்ததால் அதற்காக அரைமணிநேரம் சிகிச்சை அளித்த பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டார் என்று கூறினார். இன்று இரவோ அல்லது நாளையோ அஜித் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் சுரேஷ் சந்திரா கூறினார்.

இதையும் படியுங்கள்... மூளையில் கட்டியா? அஜித் உடலில் கண்டறியப்பட்ட புது பிரச்சனை என்ன? மேலாளர் கொடுத்த பரபரப்பு விளக்கம்

இந்த நிலையில், அஜித்தின் உடல்நிலை பற்றி பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதை பார்த்து பதறிப்போன சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் அவர் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

நடிகர் சமுத்திரக்கனி இதுகுறித்து போட்டுள்ள பதிவில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் அஜித்குமார் அவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

Scroll to load tweet…

அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டுள்ள பதிவில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

Scroll to load tweet…

இதுதவிர அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மிகுந்த அன்பைப் பெற்ற அருமைச் சகோதரர், நடிகர் திரு. அஜித்குமார் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என பதிவிட்டு உள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்...பிரச்சார மேடையாக மாறிய Flight... விமானத்தில் வாக்கு சேகரிப்பு - அலப்பறை கிளப்பும் த.வெ.க கட்சியினர்