HBD Ajith : இன்று 51-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் அஜித்துக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இல்லாத போதும், அதில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக Happy Birthday Ajith என்கிற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.

நடிகர் அஜித்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அஜித்தின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர். நடிகர் அஜித் தற்போது ஏகே 61 படத்தின் படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் உள்ளதால், அவர் படக்குழுவுடன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

நடிகர் அஜித்துக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நடிகர் அஜித்துக்கு முதல் ஆளாக, அதாவது நேற்று இரவே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என்று அவர் வாழ்த்தி உள்ளார்.

இதையும் படியுங்கள்... ‘ஆள விடுங்கடா’னு வேகமாக காரில் ஏறிய நடிகை... டயரில் காற்றை புடுங்கிவிட்டு ரசிகர்கள் ரகளை செய்ததால் பரபரப்பு

Scroll to load tweet…