ஸ்கூல்ல டேட் பண்ணக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் – அதிதி பாலன்!

Aditi Balan Talk About Dating Story in School : பள்ளியில் படிக்கும் போது யாரையும் டேட் பண்ணக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன் என்று நடிகை அதிதி பாலன் கூறியுள்ளார்.

Aditi Balan Talk About Dating Story in School days rsk

Aditi Balan Talk About Dating Story in School : அஜித் குமார் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். அருவி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்றது. ஒரு HIV பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார். அதோடு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைப் போன்று அருவி படத்திலும் அதிதி பாலன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அருவி படத்தைத் தொடர்ந்து குட்டி ஸ்டோரி என்ற வெப் சிரீஸில் நடித்தார். இதில், விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆடல் பாடல் என்ற சீரிஸில் நடித்திருந்தார். கோல்டு கேஸ் என்ற மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமானார். சாகுந்தலம் என்ற படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார்.

59 வயதில் 3ஆவது டிகிரி – ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸான நடிகர் முத்துக்காளை M.A , B. Lit!

கடந்த ஆண்டு திரைக்கு வந்த கருமேகங்கள் கலைகின்றன படம் நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது. தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் அதிதி பாலனுக்கு நல்ல ஒரு அடையாளத்த கொடுத்தது. கடைசியாக லைன்மேன் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதுவும் மாவட்ட ஆட்சியர் ரோல். குறுகிய காலத்திலேயே சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து வருகிறார்.

796CC படத்தில் சூர்யா: மாருதி கார்களின் எஞ்சின் உருவான விதம் தான் கதையா?

இந்த நிலையில் தான் பள்ளியில் நடந்த சம்பவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஸ்கூல்ல டேட் பண்ணக்கூடாதுன்னு என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால், ஸ்கூலுக்கு வெளியில் டேட் பண்ணியிருக்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார். நடிகையும், டான்ஸருமான அதிதி பாலன் வழக்கறிஞர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். 2015 ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் அதிதி பாலனுக்கு 2025 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios