சேது படத்தில் சீயான் விக்ரம் வெளிப்படுத்திய நடிப்பை விட துருவ்வின் நடிப்பு அசத்தலாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அதனை நிரூபிக்கும் விதமாக படத்தின் டிரெய்லர் யூ-டியூப்பில் 7 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
முரட்டு தேவதாஸான துருவ்... முதல் படத்திலேயே அப்பாவுக்கு டப் கொடுத்து அதிரடி... 7 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ஆதித்யா வர்மா ட்ரைலர்...
காலத்தால் அழிக்க முடியாத தேவதாஸ் கதையை சற்றே மாற்றி, இன்றைய இளைஞர்களை கவரும் வண்ணம் எடுக்கப்பட்ட படம் தான் ‘அர்ஜுன் ரெட்டி’. அறிமுக இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மார்டன் தேவதாஸ் கதையை தெலுங்கு திரையுலகமே ஆச்சர்யத்துடன் திரும்பி பார்த்தது. இந்த படத்தில் காதலியின் பிரிவால் ஏற்படும் பொல்லாத கோபத்தை எரிமலையாக வெளிப்படுத்திய விஜய் தேவரகொண்டா இளம் பெண்களின் கனவு நாயகனாக மாறிப்போனார். தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்ய செய்யப்படுகிறது.
முதற்கட்டமாக இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட ‘கபீர் சிங்’ திரைப்படம் மாஸ் ஹிட் அடித்துள்ளது. ஷாஹித் கபூர், கீரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தமிழில் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. முதலில் இயக்குநர் பாலா இயக்குவதாக இருந்த நிலையில், தயாரிப்பாளருடனான சில பிரச்னைகள் காரணமாக படத்தில் இருந்து பாலா விலகினார். தற்போது கிரீசயா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி கேரக்டரில் சியான் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் அக்டோபர் 21ம் தேதி வெளியிடப்பட்டது.
அதில் அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா வெளிப்படுத்திய ஆக்ரோஷம், காதல் இரண்டையுமே துருவ் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். மருத்துவக் கல்லூரி மாணவனாக வரும் துருவ், தனது ஜூனியர் மாணவியான மீராவை ராக் செய்யும் போதும், புட்பால் மேட்சில் தவறாக நடந்தவனை புரட்டி எடுக்கும் போதும், சாதிய பிடிவாதத்தால் பிரிந்த காதலை நினைத்து உருகும் போதும் சீயான் விக்ரமை கண்முன்பு காட்டியிருந்தார். சேது படத்தில் சீயான் விக்ரம் வெளிப்படுத்திய நடிப்பை விட துருவ்வின் நடிப்பு அசத்தலாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அதனை நிரூபிக்கும் விதமாக படத்தின் டிரெய்லர் யூ-டியூப்பில் 7 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. புலிக்கு பிறந்தது பூனையாகது என்பதை முதல் படத்திலேயே நிரூபித்துள்ள துருவ்வை, ஆதித்யா வர்மாவாக திரையில் காண ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 5, 2019, 1:14 PM IST