தனக்கும் நடிகர் அபிசரவணனுக்கும் இடையிலான பிரச்சினையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்த சமூகப் போராளிகளையும் நடிகை அதிதி மேனன் கொச்சைப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் மன்னிப்புக் கேட்காவிட்டால் அவர் மீது மான நஷ்ட வழக்குத் தொடருவோம்’ என்று மதுரையிலிருந்து ஒரு குரூப் எச்சரித்துள்ளது.

கடந்த வாரம் முழுக்கவே நடிகை அதிதி மேனனும் நடிகர் அபி சரவணனும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரியிறைத்தனர். அதிதி தன்னைத் திருமணம் பல கள்ளக்காதலர்களுடன் பழகுகிறார் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் விட்டு பலரது பெயர்களையும் வெளியிட்டார் அபி சரவணன். பதிலுக்கு அபி சரவணன் மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறிய அதிதி அவரது அடிவயிற்றில் அடிப்பதுபோல் விவசாயிகள் போராட்டம், ஜல்லிக்கட்டு போன்ற விவகாரங்களில் சமூக சேவகர் போல் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் வசூலித்து வீடும் காரும் வாங்கி வளமுடன் வாழ்வதாகக் கூறியிருந்தார்.

அதிதியின் மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு அபி சரவணன் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் மதுரை தமுக்கம் நண்பர்கள் குழு அமைப்பின் நிறுவனரும் வழக்கறிஞருமான ஷோபனா ராஜன், ‘நடிகை அதிதி மேனன் அபிசரவணனைக் குற்றம் சாட்டுவதாக நினைத்துக்கொண்டு ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டுப் போராளிகளைக் கொச்சைப்படுத்தியுள்ளார். அவரின் இந்தக் குற்றச்சாட்டு ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்காக தன்னெழுச்சியாகப் போராடுபவர்களைக் கொச்சைப்படுத்துவதாகும், அவரது அந்தப் பேச்சுக்காக உடனே மன்னிப்புக் கேட்காவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடருவோம்’ என்று எச்சரித்துள்ளார்.