தல அஜித்தை வைத்து எச்.வினோத் அடுத்தாக இயக்கவுள்ள  படத்தைப்பற்றிய புதிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து தற்போது "த்ரிஷா இல்ல நயன்தாரா', 'AAA ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தில்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிசம்பர் 14ஆம் தேதி, இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜை போட்டு துவங்கப்பட்டது. இந்த படத்தை  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்பது அனைவரும் அறிந்தது தான். 

பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட்டான 'பிங்க்' படத்தில் அஜித் அமிதாபச்சன் வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர்.

இதற்க்காக, இயக்குனர் வினோத், சற்று வித்தியாசமாகவே நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறார்.  அந்த வகையில் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். AAA படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய உடல் எடையை குறைத்து சமூகவலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்ததன் பின்னணி, இவரின் நடிகர் அவதாரம் எடுக்கத்தான் என  இப்போது தெளிவாக தெரிகிறது.