தல அஜித் நடித்து வரும் 'நேர் கொண்ட பார்வை' படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து படம் இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது மற்றொரு படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில், அருள்நிதி மற்றும் நடிகை  ஷராதா ஸ்ரீநாத் நடித்து வரும் திரைப்படம் 'K13'. இந்த படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் இவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடிப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  

'K13 ' படத்தில் இவர் நடித்த ஒரு சில காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாகவும். அந்த காட்சிகள் கயாத்திரியுடன் இவர் நடிப்பது போன்று இயக்குனர் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் முழு நேர நடிகராக மாறிவிட்டாரா என கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கு அவரே விரைவில் பதில் சொல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை பொறுத்திருப்போம்!