'மேயாத மான்' படத்தின் இயக்குனர், ரத்னகுமார் இரண்டாவதாக இயக்கியுள்ள திரைப்படம் 'ஆடை' . இந்த படத்திற்காக மிகவும் போல்டு ஆன கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்துள்ளார் அமலா பால்.

வெள்ளிக்கிழமை அன்று வெளியாக இருந்த இந்த படத்தை, ஒரு சில காரணங்களால் நேற்றைய தினம் ரிலீஸ் செய்துள்ளனர் படக்குழுவினர்.

 

மேலும் தற்போது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல கருத்துகள் கிடைத்து வருகிறது. ஆனால் தேவை இல்லாமல் அமலா பாலை சில காட்சிகளில் ஆடை எதுவும் இல்லாமல் இயக்குனர் அலையவிட்டுள்ளார் என்பது போன்ற கருத்துக்களும் எழுந்து வருகிறது. 

தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில நிமிட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தன்னுடைய உடலை கண்ணாடியில் மறைந்து கொண்டு அமலா பால் யாரேனும் உதவி செய்வார்களா என மொட்டை மாடியில் வந்து தேடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பின் அந்த கண்ணாடியும் உடைந்து விட, அவர் பீல் செய்து அமர்ந்திருக்கும் ஒரு காட்சியும் வெளியாகியுள்ளது.