'பலே வெள்ளைய தேவா' படத்தின் மூலம்  தமிழில் அறிமுகமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல் படத்திலேயே பாவாடை தாவணி, புடவை என குடும்ப குத்து விளக்காக நடித்ததால் என்னவோ இவருக்கு மார்டன் பெண்ணாக நடிக்கும் கதாப்பாத்திரங்கள் அமையவில்லை. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த பிருந்தாவனம், கருப்பன், ஆகிய படங்களிலும் ஹோம்லியாகவே நடித்தார்.

ஆனால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றதால் என்னவோ, இவருக்கு அதிகப்படியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இவருடைய கைவசம் 'மாயோன்' என்கிற படம் மட்டுமே உள்ளது

ஹோம்லியாகவே தொடர்ந்து நடித்து வந்த இவர், சமீபத்தில் மார்டன் ட்ரெஸில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுவும் பட வாய்ப்பை பெரும் ஒரு உத்தியாகவே கையாண்டு வருகின்றனர் நடிகைகள் என சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் சிலர் கூறி வருகிறார்கள்!