ஊரடங்கு காரணமாக, அணைத்து சினிமா பணிகளும் முடங்கியுள்ளதால், திரையுலகை சேர்ந்த பெப்சி தொழிலாளர்களுக்கும், நலிந்த கலைஞர்களுக்கும், திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர் - நடிகைகள் பலர் முன்வந்து உதவி செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை காஜல் அகர்வாலை தொடர்ந்து பிரபல நடிகை தமன்னா தெலுங்கு திரையுலகினருக்கு நிதி உதவியை அறிவித்துள்ளார்.

தமிழ் - தெலுங்கு என இரு திரையுலக ரசிகர்களையும் கவர்ந்து முன்னணி நடிகையாக இவருக்கு இவர், கோடிகளில் சம்பளம் வாங்கும் நிலையில், தெலுங்கு திரையுலகை சேர்த்தவர்களுக்கு மட்டும் ரூபாய். 3 லட்சம் நிதி உதவியை கிள்ளி கொடுத்துள்ளார்.

தமிழ் திரையுலை சேர்ந்தவர்களுக்கு இன்னும் இவருடைய தரப்பில் இருந்து எந்த உதவிகளும் அறிவிக்கப்படவில்லை.

ஒருவேளை நடிகை காஜல் அகர்வால் எப்படி, முதலில் சிறு தொகையை தெலுங்கு திரையுலகிற்கு நிதியாக அறிவித்து, பின் 1 .25 கோடி நிதியை தமிழ் திரையுலக பணியாளர்களுக்கும் சேர்த்து அறிவித்தாரோ, அதே பாணியில் தமன்னாவும் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும்... தமன்னா தமிழ் திரையுலகை சேர்ந்த பணியாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவாரா... அல்லது டாட்டா காட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.