கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகையை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு அவரது உடலில் கண்ட இடங்களில் கை வைத்து, அவரிடம் அடிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகையை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு அவரது உடலில் கண்ட இடங்களில் கை வைத்து, அவரிடம் அடிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரபல இந்தி நடிகை ஜரின் கான். இவர் பாலிவுட்டில் நடிகர் சல்மான்கான் நடித்த 'வீர்', 'ரெடி', 'ஹவுஸ் ஃபுல்2 ' உள்ளிட்ட, பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நடிகர் நகுல் நடித்த 'நான் ராஜாவாகப் போகிறேன்' என்ற படத்தில் ஒரு பாட்டிற்கு கவர்ச்சி நடனமாடியுள்ளார். 

இந்நிலையில் இவர் நேற்று முன் தினம், ஒரு கடை திறப்பு விழாவிற்காக அவுரங்காபாத் சென்றிருந்தார். நடிகை வருவதைக் அறிந்து அந்தக்கடையின் வாசலில் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர்.

கடையை திறந்த வைத்த பின், ரசிகர்களுக்கு கையசைத்த ஜரின் கான். பின்னர் தன்னுடைய காரில் ஏறி செல்ல முயன்றார். ஆனால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாவலர்களை மீறி சில ரசிகர்கள் முண்டியடித்து அவருடன் போட்டோ எடுக்க முயன்றனர். சில கூட்டத்தோடு கூட்டமாக அவரை தொட்டு அத்துமீறிய தால் ஆத்திரமடைந்த நடிகை சிலரை அடித்துவிட்டு கூட்டத்தில் இருந்த சிலரை தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பினார்.

பின் பாதுகாவலர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த மோசமான அனுபவம் குறித்து பேசிய நடிகை ஜரின் கான் கூறுகையில்... சிலர் கண்ட இடங்களில் என் உடலை தொட்டதால் ஆத்திரம் அடைந்து விட்டேன். அப்போது என் பாதுகாப்பிற்காக சிலரை தள்ளிவிட்டு விட்டும், அடித்து விட்டும் அங்கிருந்து தப்பினேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நடிகைகளை அழைக்கும்போது பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.