'இருட்டு அறையில் முரட்டு குத்து' , 'நோட்டா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் பிக்பாஸ் சீசன் 2 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதன் மூலம் அனைத்து  தமிழ் ரசிகர்களாலும் அறியப்பட்ட நடிகையாக மாறினார்.

இவர் நேற்றிரவு குடி போதையில்,  சென்னை நுங்கம்பாக்கம் அருகே அவருடைய நண்பர்களுடன் சொகுசு காரில் வந்த போது...  உணவு டெலிவரி செய்யும் தொழிலாளி ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும், பின் அந்த இடத்தில் இருந்து யாஷிகா சென்று விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அந்த ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவ, பலரும் யாஷிகாவை விமர்சிக்க துவங்கிவிட்டனர்.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து நடிகை யாஷிகா விளக்கம் அளித்துள்ளார். அதில் விபத்திற்குள்ளான காரில் இருந்தது தன்னுடைய நண்பர்கள் மட்டும் தான் என்றும், உண்மையில் அந்த காரில் நான் செல்லவில்லை. விபத்து குறித்து அறிந்ததும், உடனடியாக அந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டதாக கூறியுள்ளார்.

இந்த தகவலால் தான், நான் காரில் இருந்ததாக தவறான தகவல் பரவி விட்டதாக கூறியுள்ளார். யாஷிகாவின் இந்த விளக்கம் இதுவரை பரவி வந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக அமைத்துள்ளது.