'நிறம் மாறாத பூக்கள்' சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை விஷ்ணுபிரியா. கடந்த 2014ஆம் வருடம் சித்தார்த் வர்மா என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ளதாக கூறி க்யூட் புகைப்படம்  ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலர் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, "நிறம் மாறாத பூக்கள்" சீரியல் மூலம், இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்தவர் விஷ்ணுபிரியா. உடல் நல குறைவால், திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.  

இந்நிலையில் இவர் கர்ப்பமாக இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  இவர் சின்னத்திரை தாண்டி மலையாளத்தில் ஒரு சில படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார்.  மேலும் ரியாலிட்டி டான்ஸ் ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். 

விஷ்ணு பிரியாவின் கணவர் சித்தார்த் வர்மாவும் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் 'ரத்த சம்பந்தம்' என்ற சீரியலில் நடித்து வருகிறார்.  மேலும் இருவரும் இணைந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் தெலுங்கில் நடனமாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணுபிரியா கர்ப்பமாக இருப்பது தெரிந்து ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.