பிரபல நடிகை விநோதியின் கணவர் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, அவருக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

80 மற்றும் 90களில் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை விநோதினி. பேபி லக்ஷ்மி என்கிற பெயரில், மணல் கயிறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பின் 'ஆத்தா உன் கோவிலிலே', 'வண்ண வண்ண பூக்கள்' உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.  மேலும் படவாய்ப்பு குறைந்ததால், சின்னத்திரையிலும் கவனம் செலுத்த தொடங்கினார்.

அந்த வகையில் இவர் நடித்த 'சித்தி',  'அகல்விளக்குகள்', 'சக்தி', போன்ற பல தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். திருமணத்திற்குப் பின், திரையுலகை விட்டு விலகினார்.

இந்நிலையில் இவருடை கணவர் ஸ்ரீதர், நேற்று திருவான்மியூரில் இருந்து  இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பாட்ஷா என்பவரின் வண்டி மீது, ஸ்ரீதரின் வாகனம் மிக வேகமாக மோதியது.  இந்த விபத்தில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 

மேலும் நடிகை விநோதினியின் கணவருக்கு, வயிறு மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர்.  இந்த விபத்து குறித்து அடையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.