actress vijayalakshmi acting in nayagi seriyal

வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 600028' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'அஞ்சாதே' படத்தில் நடித்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுவரை தமிழில் 10க்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயலட்சுமி, பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'சென்னை 600028' பார்ட் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றாலும் தொடந்து இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்புகள் கிடைக்கவில்லை.

தயாரிப்பாளர் விஜயலட்சுமி:

விஜயலட்சுமிக்கு பட வாய்புகள் இல்லாததால் கணவர் இயக்கிய பண்டிகை படத்தை இவரே தயாரித்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப்பெற வில்லை என்றாலும். ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

சீரியல் நாயகி:

இந்நிலையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'தெய்வ மகள்' சீரியல் முடிவடைவதையொட்டி அடுத்ததாக ஒளிபராப்பாக உள்ள 'நாயகி' என்கிற சீரியலில் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த சீரியலில் நடிகை அம்பிகாவும் மிகவும் துணிச்சலான பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

நாயகி:

நாயகி சீரியல் குறித்து வெளியாகியுள்ள புரோமோவை வைத்துப் பார்க்கும்போது, ரவுடிசம் செய்யும் குடும்பத்தில் மாட்டித் தவிக்கும் அப்பாவி பெண்ணின் கதாப்பாத்திரத்தில் நடிக்கறார் விஜயலட்சுமி. 

வெள்ளித்திரையில் விஜயலட்சுமி மின்னாவிட்டலும், சின்னத்திரையில் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கிறார என்பதை பொறுத்திருந்து பார்போம்.