பிரபல கன்னட நடிகை விஜயலட்சுமி, தமிழில் 'பூந்தோட்டம்' என்கிற படத்தில் அறிமுகமாகி இருந்தாலும்,  இவர் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக 'ப்ரெண்ட்ஸ்' படத்தில் நடித்து தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.   

இந்த படத்தை தொடர்ந்து,  தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்த துவங்கினார். அந்த வகையில் கலகலப்பு, ராமச்சந்திரா, மிலிட்டரி, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார்.

தமிழ் திரைப்பட வாய்ப்புகள் குறைந்தபோது சீரியல் பக்கம் ஒதுங்கினார். அந்த பகுதியில் சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கி இருந்த நந்தினி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

இந்நிலையில் இவர் தன்னுடைய உடல் நிலை சரியில்லை என்றும், மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் கட்டப்பட்டு வருவதாக சகோதரியுடன் இணைந்து கடந்த சில மாதங்களுக்கு முன், வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதை பார்த்துவிட்டு பல கன்னட நடிகர்கள்  இவரின் மருத்துவ செலவிற்கு தங்களால் முடிந்த உதவி செய்தனர்.

சிலர் இவரை தொடர்ந்து விமர்சிக்கவும் தொடங்கினர். பின் உதவி செய்த நடிகர் ஒருவர் தன்னிடம், தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும்  புகார் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.  இது ஒருபுறமிருக்க ரஜினிகாந்தை சந்தித்து தனது கஷ்டங்களை பகிர உள்ளதாகவும், தயவு செய்து எனக்கு உதவுங்கள் என ரஜினியிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்திருந்தார்.

இந்த வீடியோ தொடர்ந்து  மற்றொரு வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டிருந்தார் விஜயலட்சுமி. இதில் தலைவர் என்னிடம் பேசினார் எதுக்குமே பயப்பட வேண்டாம் என தனக்கு ஆறுதல் கூறியதாகவும், இவரின் வார்த்தை உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சிறந்த மனிதாபம் மிக்க மனிதர் என்றும் இப்படிப்பட்ட நல்ல மனிதர் நம்மளுடைய தலைவராக இருக்க வேண்டும் என அவர் அந்த வீடியோவில் விஜயலட்சுமி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.